வலைப்பூ - Blog என்பது இன்று இணைய உலகில் பெரும் ஊடகமாக இருப்பதில் சந்தேகம் இல்லை. நமது எண்ணங்களை உலகிற்கு தெரியப்படுத்த நிறைய சமூக வலை பக்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்டு இருப்பது Blog ஆகும். ஏனெனில் இவை ஓர் இலவச இணையதளம். Blogger-இல் ஓர் கணக்கு மட்டும் துவக்கினால் போதும். நமக்கான இணையதளம் நம் கையில்.
blog tips in tamil
இதில் நமக்கு விருப்பமான செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், காணொளி, நாட்டு நடப்புகள் என அனைத்தையும் பகிரலாம். உங்களுக்கும் வலைப்பூ - blog ஆரம்பித்து உங்கள் எண்ணங்களை ஆவணப்படுத்த வேண்டுமா? ஆனால் எவ்வாறு துவங்குவது என்ற வழிமுறை தெரியவில்லையா? அதற்காக தான் எனது தமிழ்வாசி என்ற தளத்தில் "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர்" என்ற தொடர் கட்டுரை மூலம் பகிர்ந்து வருகிறேன். இக்கட்டுரையை நீங்கள் தொடர்ந்தால் உங்களாலும் வலைப்பூ துவங்கி எழுத முடியும்.